கல்லூரி மாணவி படுகொலை: மலைப்பகுதியில் பதுங்கிய மாணவர் சிக்கினார்


கல்லூரி மாணவி படுகொலை: மலைப்பகுதியில் பதுங்கிய மாணவர் சிக்கினார்
x

கல்லூரி மாணவியை படுகொலை செய்த மாணவர் மலைப்பகுதியில் பதுங்கி இருந்தார். அவரை கிராம மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

சேலம்,

சேலம் மாவட்டம் கூடமலை பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய 2-வது மகள் ரோஜா (வயது 19). இவர், ஆத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. தமிழ் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

இவரை, ஆத்தூர் தாண்டவராயபுரம் பகுதியை சேர்ந்த ராமர் மகன் சாமிதுரை என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்ததாகவும், காதலை ஏற்க மறுத்ததால் தலையில் கல்லை போட்டு ரோஜாவை கொலை செய்து விட்டு தலைமறைவாகி விட்டதாகவும் கூறப்பட்டது.

பொதுமக்கள் பிடித்தனர்

சென்னை தனியார் கல்லூரி மாணவரான சாமிதுரையை வலைவீசி அவரை தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று காலை அங்குள்ள மலைப்பகுதியில் பதுங்கியிருந்த சாமிதுரையை கிராம மக்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீஸ் விசாரணையின்போது தானும், ரோஜாவும் 2 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்ததாகவும், கடந்த சில மாதங்களாக தன்னை விட்டு ஒதுங்கி சென்று தன்னை ரோஜா உதாசீனப்படுத்தியதால் ஆத்திரத்தில் ரோஜாவை தீர்த்துக்கட்டியதாக சாமிதுரை போலீசாரிடம் தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் சாமிதுரையை கைது செய்தனர்.


Next Story