கல்லூரி பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


கல்லூரி பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x

ராணி அண்ணா மகளிர் கல்லூரி பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்

திருநெல்வேலி

நெல்லை பழைய பேட்டை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றி வருகின்ற பேராசிரியர்கள் நேற்று கோரிக்கை அட்டை ஏந்தி, கருப்பு பேட்ஜ் அணிந்து கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் போட்டனர்.

மாநில தகுதி தேர்வை உடனே நடத்த வேண்டும். கல்லூரி உதவி பேராசிரியர் நியமன முறையில் பணி அனுபவ, நேர்காணல் நடைமுறையை பின்பற்ற வேண்டும். கவுரவ விரிவுரையாளர்களுக்கு சட்டக்கல்லூரிக்கு இணையாக ரூ.30 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் 35-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story