கல்லூரி பேராசிரியர்கள் நூதன போராட்டம்


கல்லூரி பேராசிரியர்கள் நூதன போராட்டம்
x
தினத்தந்தி 14 Sept 2023 12:30 AM IST (Updated: 14 Sept 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

மேலநீலிதநல்லூரில் கல்லூரி பேராசிரியர்கள் நூதன போராட்டம் நடத்தினர்.

தென்காசி

பனவடலிசத்திரம்:

சங்கரன்கோவில் தாலுகா மேலநீலிதநல்லூரில் உள்ள அரசு உதவிபெறும் தனியார் கல்லூரியில் பணிபுரிந்து வரும் பேராசிரியர்கள், அலுவலர்களுக்கு கடந்த 2 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறி, அந்த கல்லூரியின் முன்பாக நேற்று பேராசிரியர்கள் கூட்டமைப்பான மூட்டா சார்பில் காத்திருப்பு போராட்டம் மற்றும் மண்ணை உண்ணும் போராட்டம் நடந்தது.

மூட்டா செயலாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசுகையில், ''கல்லூரியல் பணிபுரியும் பேராசிரியர்கள், பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கக்கோரி, கல்லூரி கல்வி இயக்குனர், உயர்கல்வித்துறை செயலாளர், மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு மனு அனுப்பியும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே தமிழக அரசு எங்களின் கோரிக்கைகளை செவிசாய்த்து சம்பளம் வழங்க வேண்டும்'' என்றார்.

போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தரையில் அமர்ந்து இலை விரித்து மண்ணை உண்ணுவது போன்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.



Next Story