வேளாண்மை கல்லூரியில் முப்பெரும் விழா
வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் வேளாண்மை கல்லூரியில் 7-வது மாணவர் மன்றம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.
வாசுதேவநல்லூர்:
வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் வேளாண்மை கல்லூரியில் 7-வது மாணவர் மன்றம் சார்பில் கல்லூரி தினம், விடுதி தினம், மாணவர் மன்ற விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது. கல்லூரி தலைவர் எஸ்.தங்கப்பழம், தாளாளர் டி.முருகேசன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். டாக்டர் நிஷா பிரதீபா வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் ஏ.ராமலிங்கம் பேசினார். சிறப்பு அழைப்பாளராக கேரள மாநில வருமான வரித்துறை முன்னாள் இயக்குனர் ஆல்பர்ட் ஜோதிமணி கலந்து கொண்டு பேசினார்.
கல்லூரி அறிக்கை டாக்டர் கே.ஹரிசங்கர், மன்ற அறிக்கையை மாணவர் மன்ற செயலாளர் இன்பென்ட் நிஜோல், விடுதி அறிக்கையை ஐஸ்வர்யா ஆகியோர் வாசித்தனர். தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மன்ற செயலாளர், இணை செயலாளர்களுக்கு சிறப்பு கேடயங்கள், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில் மாணவன் மன்ற இணை செயலாளர் பிரியங்கா நன்றி கூறினார்.
இதேபோல் இறுதியாண்டு மாணவர்களுக்கு பிரிவுபசார விழா நடந்தது. தோட்டக்கலை துறை உதவி பேராசிரியர் அனு மணி வரவேற்று பேசினார். மாணவர்கள் பிரியாவிடை பெற்று சென்றனர். முடிவில் உதவி பேராசிரியர் நாகனந்தா சுகந்தன் நன்றி கூறினார்.
எஸ்.தங்கப்பழம் சட்டக்கல்லூரி சார்பில் சீவநல்லூர் கிராமத்தில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் காளிச்செல்வி அறிவுறுத்தலின்பேரில் நடந்த நிகழ்ச்சிக்கு உதவி பேராசிரியர் அரிபா தலைமை தாங்கினார். பெண் கல்வி, பெண்கள் வேலைவாய்ப்பு, பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு நலச்சட்டம் உள்ளிட்டவை குறித்து மாணவ-மாணவிகள், ெபாதுமக்களுக்கு எடுத்து கூறினார்கள். இதற்காக ஏற்பாடுகள் செய்து கொடுத்த சீவநல்லூர் ஊராட்சி தலைவர் முத்துமாரிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.