கல்லூரி ஆண்டு விழா
கழுகுமலை அருகே குருவிகுளத்தில் வளனார் கல்லூரி ஆண்டு விழா நடந்தது.
கழுகுமலை:
கழுகுமலை அருகே உள்ள குருவிகுளத்தில் வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்றது. நெல்லை சமூக சேவை சங்கத்தின் இயக்குனர் பிரான்சிஸ் சேவியர் தலைமை தாங்கினார். மேல இலந்தைகுளம் திரு இருதய ஆண்டவர் ஆலய பங்குத்தந்தை ஜெயபால் முன்னிலை வகித்து கலை இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். கல்லூரி செயலர் ஜோசப்கென்னடி பல்கலைக்கழக தேர்வில் கல்லூரி அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற இளங்கலை தமிழ்த்துறை மூன்றாம் ஆண்டு மாணவர்கள் பொன்ராகவன், சுக்ரியா மற்றும் வணிகவியல் துறை மாணவர்கள் அர்ச்சனா, காளிராஜ் ஆகியோர்களுக்கு சிறப்பு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இளங்கலை முதலாவது ஆண்டு ஆங்கிலதுறை மாணவர் சுதாகர் வரவேற்றார். கல்லூரி முதல்வர் அந்தோணிராஜ் ஆண்டறிக்கையை வாசித்தார். கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாணவிகள் சுக்ரியா, சியாமளாதேவி ஆகியோர் நன்றி கூறினர். வணிகவியல் துறை மாணவி செலின்கிளாரா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். விழாவில் வளனார் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் பாலமுருகன் மற்றும் கல்லூரி உதவி பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அருட்சகோதரி ஜனனி செய்திருந்தார்.