பழவேற்காடு மீனவர்களுடன் கலெக்டர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி


பழவேற்காடு மீனவர்களுடன் கலெக்டர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி
x

பழவேற்காடு மீனவர்களுடன் கலெக்டர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

திருவள்ளூர்

பொன்னேரி அருகே காட்டுப்பள்ளியில் தனியார் துறைமுகங்கள் இயங்கி வருகிறது. இந்த துறைமுகங்களில் கட்டுமான பணி நடைபெற்று வருவதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி மீனவர்கள் பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்தினர்.

தமிழக அரசு தலையிட்டு 1,750 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று கூறி முதலில் 250 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக குறைந்தபட்ச ஊதியம் பெற்று வரும் நிலையில் ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் அறிவித்த 1,500 பேருக்கு வேலை வழங்கக்கோரி கடந்த மாதம் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான்வர்கீஸ் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தி 4 நாட்களாக நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் தலைமையில் தனியார் துறைமுக அதிகாரிகள் வருவாய்த்துறை அதிகாரிகள், போலீஸ்துறை அதிகாரிகள் பழவேற்காடு மீனவர்களுடன் மீண்டும் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாததால் தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை மீண்டும் கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான்வர்கீஸ் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது.

மீனவர்களின் கோரிக்கையை தனியார் நிறுவன அதிகாரிகள் தங்களுடைய மேலதிகாரிகளுக்கு அனுப்பி அவர்கள் கூறும் கருத்துக்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். மீண்டும் நடைபெற உள்ள கூட்டத்தில் முடிவை தெரிவிப்பதாக கூறியதையடுத்து பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டது. இதையடுத்து நள்ளிரவு வரை நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. பேச்சுவார்த்தை மீண்டும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டதால் மீனவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.


Next Story