காபி வித் கலெக்டர் என்னும் தலைப்பில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுடன் கலெக்டர் கலந்துரையாடல் நிகழ்ச்சி


காபி வித் கலெக்டர் என்னும் தலைப்பில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுடன் கலெக்டர் கலந்துரையாடல் நிகழ்ச்சி
x

காபி வித் கலெக்டர் என்னும் தலைப்பில் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று பள்ளி கல்வித்துறை சார்பாக ஆர்.கே.பேட்டை வட்டத்திற்கு உட்பட்ட அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 9-வது வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை பயிலும் மாணவ- மாணவிகள் கல்வித்திறனை ஊக்கப்படுத்தும் வகையில் காபி வித் கலெக்டர் என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது கலெக்டர் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது கலெக்டர் மாணவ மாணவிகளிடம் அன்றாடம் வகுப்பில் நடத்தப்படும் பாடங்களை நாளை பார்த்துக் கொள்ளலாம் என தள்ளி போடாமல் அன்று நடத்திய பாடங்களை அன்றே புரிந்து படித்து மனதில் நிறுத்தி கொள்ள வேண்டும். அது மட்டும் இல்லாமல் தினமும் படிப்பதற்கான நேரத்தை ஒதுக்கி அதற்கான திட்டத்தை வகுத்து படிக்கும் முறையை அறிந்து கொள்ள வேண்டும். மேலும் இந்த பருவத்தில் தேவையற்ற பழக்க வழக்கங்களுக்கு தங்களை உட்படுத்தி கொள்ளாமல் ஒழுக்கத்தோடு கற்கின்ற கல்வி தங்களது வாழ்வை உயர்த்தும். இந்த வயதில் நமக்கு இருக்கக்கூடிய ஒரே கடமை படிப்பு தான் என்பதை உணர்ந்து மாணவ-மாணவிகள் செயல்பட்டால் எதிர்கால வாழ்வு சிறப்பாக அமையும். அத்தகைய சிறப்பான வாழ்க்கையை பெறுகின்ற வகையில் நீங்கள் செயல்பட வேண்டுமென அறிவுரைகளை வழங்கினார்.

மேலும் மாணவ- மாணவிகளுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் தேன்மொழி, பள்ளி துணை ஆய்வாளர்கள் சவுத்ரி, வெங்கடேசலு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பவானி, மற்றும் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story