இளையான்குடியில் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகளை கலெக்டர் திடீர் ஆய்வு
இளையான்குடியில் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகளை கலெக்டர் மதுசூதன் ரெட்டி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இளையான்குடி
இளையான்குடியில் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகளை கலெக்டர் மதுசூதன் ரெட்டி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தாலுகா அலுவலகத்தில் ஆய்வு
இளையான்குடி தாலுகா அலுவலகத்தில் பல்வேறு நிலைகளில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி திடீர் ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து அவர்களின் தேவைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் விதமாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
துறை ரீதியாக ஆய்வுகள் நடத்தி அரசுக்கு அறிக்கைகள் சமர்ப்பித்தல் தொடர்பாக கலெக்டர் ஆய்வு செய்தார். இ-சேவை மையம், நில அளவை பிரிவு, வட்ட வழங்கல் பிரிவு, தாசில்தார் அலுவலகத்தின் ஒவ்வொரு பிரிவை சார்ந்த அலுவலர்கள் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், நிலுவையில் உள்ள பதிவேடுகள், பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்கள், பல்வேறு கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அது தொடர்பாக பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், அலுவலக பணியாளர்களின் வருகை பதிவேடு, வளர்ச்சி திட்டங்களில் முடிவுற்ற பணிகள், நிறைவேற்றி வரும் பணிகள், நலத்திட்ட உதவிகள் ஆகியவற்றின் கோப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கண்ணகி, வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, தாசில்தார்கள் பாலகுரு, கோபிநாத் மற்றும் தனி தாசில்தார் அந்தோணி ராஜ், கண்ணன் உள்பட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
தீயணைப்பு நிலைய இடம்
தமிழ்நாடு அரசின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3.75 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய பஸ் நிலையத்தின் கட்டிட பணிகளையும், சுற்றுச்சுவர், வெளிப்புறம் முதல் நெடுஞ்சாலை வரை பேவர் பிளாக் கல் பதிக்கும் பணிகள் மேற்கொள்வதற்கும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. வருகிற மே மாதம் இறுதியில் அனைத்து பணிகளையும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர உத்தரவிட்டார்.
மேலும் புதிய தீயணைப்பு நிலையத்திற்கான இடத்தை தேர்வு செய்வதற்காக புதிய பஸ் நிலையம் அருகில் ஒதுக்கப்பட்டுள்ள 1 ஏக்கர் இடம் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுடன் நேரில் ஆய்வு செய்தார்.
இளையான்குடியில் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகளை கலெக்டர் மதுசூதன் ரெட்டி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இளையான்குடி பேரூராட்சி 18 வார்டுகளிலும் தினசரி சேரும் குப்பைகளை பேரூராட்சி அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள 2.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள வள மீட்பு பூங்காவில் சேகரிக்கப்பட்டு அதன் மூலம் 20 ஆண்டுகளுக்கு மேலான பழைய திட கழிவுகளை மறுசுழற்சி முறையில் குப்பைகளை தரம் பிரிப்பதற்கு என ரூ.44.27 லட்சம் மதிப்பீட்டில் ஒப்பந்த புள்ளி கோரப்பட்டு அதற்கான பணியும் நடைபெற்று வருகிறது. அப்பணிகள் தொடர்பாகவும். பிரித்து எடுக்கப்பட்ட பழைய திடக்கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்திடவும், தரம் பிரிக்கப்பட்ட கண்ணாடி பொருட்கள், தோல் கழிவு பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்த ஆய்வுகளின் போது பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ராஜா, இளநிலை பொறியாளர் சந்திரமோகன், பேரூராட்சி செயல் அலுவலர் கோபிநாத் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.