சிங்கம்புணரி ஒன்றியத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு


சிங்கம்புணரி ஒன்றியத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 7 April 2023 12:15 AM IST (Updated: 7 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

சிவகங்கை

சிங்கம்புணரி

சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

வளர்ச்சி திட்ட பணிகள்

சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 12 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. ஊராட்சி ஒன்றியங்களின் செயல்பாடுகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக ஆண்டாய்வு மேற்கொள்ளும் பொருட்டு கலெக்டர் மதுசூதன்ெரட்டி சிங்கம்புணரி மற்றும் எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஆய்வு பணி மேற்கொண்டார்.

அப்போது ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் ஒவ்வொரு பிரிவை சார்ந்த அலுவலர்கள் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், நிலுவையில் உள்ள பதிவேடுகளின் நிலை மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் பல்வேறு கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளும், அது தொடர்பாக பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் தொடர்பாகவும், அலுவலக பணியாளர்களின் வருகை பதிவேடு நன்பதிவேடு, பூர்த்தி செய்யப்பட்ட பணியிடங்கள், காலியிடங்கள் குறித்தும் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளில் முடிவுற்ற பணிகள், நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

ஆய்வு

மேலும் அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் துறைவாரியாக பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள நலத்திட்ட உதவி விவரங்கள், பயனாளிகளின் எண்ணிக்கை போன்றவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நிதி நிலை மற்றும் அலுவலகங்களில் தேவையான அடிப்படை மேம்படுத்துதல், கூடுதல் கட்டிடங்கள், பயனற்ற நிலையில் உள்ள கட்டிடங்கள், அலுவலர்களின் கோரிக்கைகள் உள்ளிட்டவை குறித்தும் கலெக்டர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு கட்டப்பட்டு வரும் புதிய கட்டிட பணியை அவர் பார்வையிட்டார். ஆய்வின்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் சாந்தி, சிங்கம்புணரி வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்ரமணியன், கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமணராஜூ, மற்றும் அலுவலக மேலாளர் ஜெயஸ்ரீ மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.


Next Story