வெண்ணி காலாடிக்கு சிலை அமையும் இடம் குறித்து கலெக்டர் ஆய்வு


வெண்ணி காலாடிக்கு சிலை அமையும் இடம் குறித்து கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 30 April 2023 12:15 AM IST (Updated: 30 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிவகிரி அருகே வெண்ணி காலாடிக்கு சிலை அமைக்க இடம் தேர்வு குறித்து கலெக்டர் துரை ரவிச்சந்திரன் ஆய்வு செய்தார்.

தென்காசி

சிவகிரி:

சிவகிரி தாலுகா நெல்கட்டும்செவல் பச்சேரி கிராமத்தில் மாமன்னர் பூலித்தேவரின் முதன்மை படைத்தளபதி மாவீரர் வெண்ணி காலாடிக்கு சிலை அமைக்க தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அந்த சிலை அமைக்க இடம் தேர்வு செய்யும் பொருட்டு மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் பச்சேரி கிராமத்தில் பஸ் நிறுத்தம் அருகே ஆய்வு செய்தார்.

அப்போது சங்கரன்கோவில் உதவி கலெக்டர் சுப்புலட்சுமி, சிவகிரி தாசில்தார் பழனிவேல்சாமி, வருவாய் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் வீரசேகரன், தலையாரி தில்லையரசி மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story