வாஞ்சிநாதன் சிலைக்கு கலெக்டர், அரசியல் கட்சியினர் மரியாதை
செங்கோட்டையில் பிறந்த நாளையொட்டி வாஞ்சிநாதன் சிலைக்கு கலெக்டர், அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
செங்கோட்டை:
செங்கோட்டையில் பிறந்த நாளையொட்டி வாஞ்சிநாதன் சிலைக்கு கலெக்டர், அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
வாஞ்சிநாதன் பிறந்த நாள்
சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதைெயாட்டி செங்கோட்டையில் அவரது மணிமண்டபத்தில் உள்ள மார்பளவு சிலைக்கு தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் வாஞ்சிநாதனின் தம்பி கோபாலகிருஷ்ணன் பேரன் வாஞ்சிகோபாலகிருஷ்ணன், மக்கள் தொடா்பு அலுவலா் இளவரசி, தாசில்தார் முருகுசெல்வி, முன்னாள் நகர்மன்ற தலைவா் எஸ்.எம்.ரஹீம், நகர்மன்ற உறுப்பினா்கள் முருகையா, மேரி, முன்னாள் நகர்மன்ற உறுப்பினா் குட்டிராஜா உள்பட பலா் கலந்து கொண்டனா். அதனைதொடா்ந்து செங்கோட்டை நகர்மன்ற தலைவா் ராமலெட்சுமி மாலை அணிவித்து மரியாதை செய்தார். நகர்மன்ற உறுப்பினா் பேபிரெசவுபாத்திமா உள்பட பலா் கலந்து கொண்டனா்.
பழனிநாடார் எம்.எல்.ஏ.
பின்னர் பழனிநாடார் எம்.எல்.ஏ. தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் வாஞ்சிநாதன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தென்காசி நகர தலைவர் மாடசாமி ஜோசியர், மாநில பொதுக்குழு உறுப்பினா் எம்.எஸ்.முத்துசாமி, மாவட்ட அமைப்பு செயலாளா் ஜோதிலிங்கம், செங்கோட்டை நகர தலைவா் ராமர், துணைத்தலைவா் கோதரிவாவா, செயலாளா் இசக்கியப்பன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
நகர தி.மு.க. சார்பில் நகர செயலாளா் வழக்கறிஞா் ஆ.வெங்கடேசன் ஆலோசனையின் பேரில் நகர நிர்வாகிகள் மணிமண்டபத்தில் உள்ள மார்பளவு சிலைக்கும், பஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள முழுஉருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அ.தி.மு.க.-பா.ஜனதா
அ.தி.மு.க. சார்பில் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா ஆலோசனையின் பேரில் பஸ் நிலையம் அருகே அமைந்துள்ள வாஞ்சிநாதன் முழுஉருவ சிலைக்கு மாவட்ட துணைச்செயலாளா் பொய்கை சோ.மாரியப்பன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் நகர செயலாளா் கணேசன், நகர்மன்ற துணைத்தலைவா் நவநீதகிருஷ்ணன், நகர்மன்ற உறுப்பினா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
பாரதீய ஜனதா கட்சி சார்பில் நகர தலைவர் வேம்புராஜ் தலைமையில் நகர நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். இதுபோல் இந்து அமைப்புகள், தமிழ்நாடு பிராமண சங்க நிர்வாகிகள், சமூக ஆர்வலா்கள் உள்பட பலா் மரியாதை செலுத்தினர்.