டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கலெக்டர், முதல்-அமைச்சருக்கு மனு
டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கலெக்டர், முதல்-அமைச்சருக்கு மனு அனுப்பி உள்ளனர்.
வாணியம்பாடி அருகே பள்ளி மருத்துவமனை அருகே உள்ள மதுபான கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் கலெக்டர் மற்றும் முதல்-அமைச்சருக்கு மனு அனுப்பி உள்ளனர்.
அதில் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலங்காயத்தை அடுத்த மிட்டூர் பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. இந்த கடையின் வழியாக தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் வேலைக்கு செல்வதுடன் மாணவ, மாணவிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கர்ப்பிணி பெண்கள், பொதுமக்களும், பெண்கள் செல்கின்றனர்.
கடையை ஒட்டி அனுமதி இன்றி பார் நடைபெற்று வருகிறது. இதனால் மாணவ- மாணவிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே இந்த மதுபான கடையை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் பலமுறை புகார் மனுக்கள் அளித்தும், ஆர்ப்பாட்டம் நடத்தியும் இதுநாள் வரையில் மாற்றப்படாமல் உள்ளது. உடனடியாக மகுபான கடையை மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.