'தினத்தந்தி' செய்தி எதிரொலி: பழுதடைந்த குடிநீர் குழாய் சீரமைப்பு
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி: பழுதடைந்த குடிநீர் குழாய் சீரமைப்பு
ஈரோடு
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பொதுமக்களின் தாகத்தை தீர்ப்பதற்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது. அதில் 2 குடிநீர் குழாய்கள் மூலம் தண்ணீர் வந்துகொண்டு இருந்தது. அதனை கலெக்டர் அலுவலக வளாகத்துக்கு வரும் பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்தநிலையில் குடிநீர் குழாயில் பழுது ஏற்பட்டது. இதன்காரணமாக அதனை பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.
இதுகுறித்த செய்தி நேற்று 'தினத்தந்தி'யில் படத்துடன் வெளியானது. இதைத்தொடர்ந்து குடிநீர் குழாயில் ஏற்பட்ட பழுதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரிசெய்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர். இதனால் பொதுமக்களின் நலன் கருதி செய்தி வெளியிட்டு உதவிய 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story