மருங்காபுரி ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சிப்பணிகளை கலெக்டர் ஆய்வு


மருங்காபுரி ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சிப்பணிகளை  கலெக்டர் ஆய்வு
x

மருங்காபுரி ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சிப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

திருச்சி

மருங்காபுரி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, தாழம்பாடி, ஆலம்பட்டி ஊராட்சி, தெத்தூர் ஊராட்சி, உசிலம்பட்டி ஊராட்சி, எம்.இடையப்பட்டி ஊராட்சி, செவல்பட்டி ஊராட்சி, துவரங்குறிச்சி ஊராட்சி, கரடிப்பட்டி ஊராட்சி ஆகியவற்றில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளையும் கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்திட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

முன்னதாக, வெங்கட்நாயக்கன்பட்டி நியாயவிலைக் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவு பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்தும், பொதுமக்களுக்கு சரியான முறையில் வழங்கப்படுவதையும் கலெக்டர் ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து, கருமலை அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தை பார்வையிட்டு அங்கு பராமரிக்கப்பட்டு வரும் மருந்து இருப்பு, பணியாளர்களின் விவரம் உள்ளிட்ட பதிவேடுகளை அவர் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் பற்றி மருத்துவரிடம் கேட்டறிந்தும், குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு குழந்தைகள் நல பரிசு பெட்டகத்தை வழங்கினார். இந்த ஆய்வின் போது, மருங்காபுரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.


Next Story