ஆரணி தொகுதியில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு


ஆரணி தொகுதியில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு
x

ஆரணி தொகுதியில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் முருகேஷ் நேரில் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை

ஆரணி தொகுதியில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் முருகேஷ் நேரில் ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதியில் மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட காமக்கூர் கமண்டல நாகநதி ஆற்றுபடுகை பகுதியில் தடுப்பணை அமைக்கும் பணி மற்றும் தச்சூர் கிராமத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வு தொகுப்பு வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை கலெக்டர் பா.முகேஷ் ேநரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஒப்பந்ததாரர்களிடம் பணி விரைந்து முடிக்க வேண்டும் என்று கூறினார்.

தொடர்ந்து ஆரணி நகரில் வி.ஏ.கே.நகர், ஜெயலட்சுமி நகர் பகுதியில் நடைபெற்று வரும் பூங்கா வளர்ச்சி பணிகளையும் ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து ஆரணி, மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியங்களில் வெள்ளேரி, நேத்தப்பாக்கம் எஸ்.வி.நகரம், மருசூர் உள்ளிட்ட கிராமங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, உறிஞ்சிக்கிணறு, அங்கன்வாடி, பள்ளி கட்டிடம் உள்ளிட்ட வளர்ச்சி பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தண்ணீர் வசதி இல்லை

பின்னர் ஆரணி தாலுகா அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட போது, வெளிப்பகுதியில் பொதுமக்கள் அமருவதற்கான இருக்கைகள் இல்லை. குடிதண்ணீர் வசதி இல்லை. எங்கு பார்த்தாலும் குப்பைகளாக இருப்பதை பார்த்து நகராட்சி ஆணையாளருக்கு தகவல் தெரிவித்து, தாலுகா அலுவலகம் முழுமையாக தூய்மைப்படுத்த வேண்டும், தண்ணீர் வசதி செய்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

அப்போது ஆரணி உதவி கலெக்டர் எம்.தனலட்சுமி, தாசில்தார் ஆர்.ஜெகதீசன், நகராட்சி ஆணையாளர் பி.தமிழ்ச்செல்வி, நகராட்சி பொறியாளர் டி.ராஜவிஜய காமராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திலகவதி, சவீதா, பா.விஜயலட்சுமி மற்றும் உதவி செயற் பொறியாளர், ஒன்றிய பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், மண்டல துணை தாசில்தார்கள் உடனிருந்தனர்.


Next Story