நீர்வரத்து கால்வாய் பாதையை கலெக்டர் நேரில் ஆய்வு


நீர்வரத்து கால்வாய் பாதையை கலெக்டர் நேரில் ஆய்வு
x

வேங்கிக்கால் ஏரியின் உபரிநீர் செல்லும் நீர்வரத்து கால்வாய் பாதையை கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை

வேங்கிக்கால் ஏரியின் உபரிநீர் செல்லும் நீர்வரத்து கால்வாய் பாதையை கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்தார்.

வேங்கிக்கால் ஏரி

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் எதிரில் வேங்கிக்கால் ஏரி உள்ளது. கடந்த ஆண்டு பெய்த மழையின் போது இந்த ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறியது.

அப்போது நீர்வரத்து கால்வாய்கள் தூர்வாராததால் மழைநீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்தனர்.

அதனை கருத்தில் கொண்டு மழைகாலம் தொடங்குவதற்கு முன்பு வேங்கிக்கால் ஏரியில் இருந்து உபரிநீர் செல்லும் சேரியந்தல் ஏரி, நொச்சிமலை ஏரி, கீழ்நாத்தூர் ஏரி ஆகியவற்றின் நீர்வரத்து கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் நெடுஞ்சாலைத்துறைக்கு உட்பட்ட பகுதிகள் வழியாக இந்த ஏரிகளின் கால்வாய்கள் செல்லும் பகுதியில் பக்க கால்வாய்கள், சிறுபாலங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

கலெக்டர் ஆய்வு

இந்த நிலையில் இன்று வேங்கிக்கால் ஏரியில் இருந்து உபரி நீர் செல்லும் சேரியந்தல் ஏரி, நொச்சிமலை ஏரி, கீழ்நாத்தூர் ஏரி ஆகியவற்றின் நீர்வரத்து கால்வாய் செல்லும் பாதையை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது கடந்த ஆண்டு பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட பாதிப்பு போன்று இந்த ஆண்டும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்வாய் அமைக்கும் பணிகளை இம்மாத இறுதிக்குள் விரைந்து முடிக்க வேண்டும்.

மேலும் திருவண்ணாமலை அவலூர்பேட்டை சாலையில் சிறுபாலத்தின் பக்கவாட்டில் உள்ள மண் குவியல்களை உடனடியாக அகற்றிடுமாறும், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

ஆய்வின் போது நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முரளி, உதவி கோட்ட பொறியாளர் ரகுராமன், உதவி பொறியாளர் கலைமணி, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் ராமகிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர் (நீர்வளம்) சிவக்குமார், உதவி கலெக்டர் வெற்றிவேல், தாசில்தார் சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மரியதேவ்ஆனந்த், பரமேஸ்வரன் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் உடனிருந்தனர்.


Related Tags :
Next Story