உழவர் சந்தை அமைய உள்ள இடத்தை கலெக்டர் ஆய்வு
ஆம்பூர் நகராட்சியில் உழவர் சந்தை அமைய உள்ள இடத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.
திருப்பத்தூர்
ஆம்பூர் நகராட்சி கஸ்பா பகுதியில் உழவர் சந்தை அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள இடத்தை நேற்று திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து கஸ்பா பகுதியில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும், நோயாளிகளுக்கு ஊசி செலுத்தப்படும் அறை, மருந்துகள் வைக்கப்பட்டுள்ள அறைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் கஸ்பா பகுதியில் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் 600 மீட்டர் நீளத்திற்கு தார் சாலை அமைக்கும் பணியை பார்வையிட்டார். வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா, வேளாண் வணிகம் மற்றும் வேளாண் விற்பனை துணை இயக்குனர் செல்வராஜூ, தாசில்தார் மகாலட்சுமி, நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story