நீர்வரத்து கால்வாய்களை கலெக்டர் ஆய்வு


நீர்வரத்து கால்வாய்களை கலெக்டர் ஆய்வு
x

நீர்வரத்து கால்வாய்களை ஆய்வு செய்த கலெக்டர் தூர்வார உத்தரவிட்டார்.

ராணிப்பேட்டை

ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு பகுதியில் உள்ள நீர்வரத்து கால்வாய் மற்றும் அதே பகுதியில் உள்ள தனியார் ஷூ கம்பெனி பின்புறம் உள்ள நீர்வரத்து கால்வாய்களை திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் 5 பொக்லைன் எந்திரங்களை கொண்டு உடனடியாக நீர்வரத்து கால்வாய்களை தூர்வார வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து ஆம்பூர் நகராட்சி கே.எம். சாமி நகர் மற்றும் சாமியார் மடம் பகுதிகளில் உள்ள நீர்வரத்து கால்வாய்களை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்து ஒருவார காலத்திற்குள் தண்ணீர் சுலபமாக செல்லும் வகையில் தூர்வார நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார்.

திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா, தாசில்தார் மாகாலட்சுமி, நகராட்சி ஆணையர் ஷகிலா, துத்திபட்டு ஊராட்சி மன்ற தலைவர் சுவிதா கணேஷ் மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.


Next Story