மணப்பாறை ஊராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு


மணப்பாறை ஊராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
x

மணப்பாறை ஊராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

திருச்சி

மணப்பாறை ஊராட்சிஒன்றியம், சித்தாநத்தம் ஊராட்சிக்கு கலெக்டர் பிரதீப்குமார் வருகை தந்தார். அவர் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பீட்டில் கரையாம்பட்டி கிராமத்தில் கருப்பன் குளம் ஆழப்படுத்தும் பணிகள், சித்தாநத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட சமையலறை கட்டிடம், மலையடிப்பட்டி ஊராட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளுர் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பீட்டில் ஆவாரம்பட்டி கிராமத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு வரும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதேபோல் கருப்பூர் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.17 லட்சத்து 83 ஆயிரம் மதிப்பீட்டில் மானாங்குன்றம் கிராமத்தில் தட்டான் ஊரணி ஆழப்படுத்தும் பணிகளையும், ரூ.3 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் கருப்பூர் ஊராட்சி, செவக்காட்டூரில் சிமெண்டு சாலை அமைக்கும் பணிகளையும், ரூ.4 லட்சத்து 83 ஆயிரம் மதிப்பீட்டில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கருப்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு புதியதாகக் கட்டப்பட்டு வரும் கழிப்பறை கட்டடிடத்தின் கட்டுமானப் பணிகளையும் மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து மருங்காபுரி ஊராட்சி ஒன்றியம், பளுவஞ்சி ஊராட்சி, திருநெல்லிப்பட்டி ஊராட்சியில் முத்தாழ்வார்பட்டி ஊராட்சி, டி. இடையப்பட்டி ஊராட்சி, உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளையும் ஆய்வு செய்தார். மேலும் பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்திட சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தாசில்தார்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story