சின்னசேலம் ஒன்றியத்தில்வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு


சின்னசேலம் ஒன்றியத்தில்வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 13 Sept 2023 12:15 AM IST (Updated: 13 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சின்னசேலம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

கள்ளக்குறிச்சி


சின்னசேலம்,

சின்னசேலம் ஒன்றிய பகுதியில் நடந்த வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஷ்ரவன் குமார் நேரில் ஆய்வு செய்தார். அதன்படி, நமச்சிவாயபுரம் ஊராட்சியில் விருதாம்பிகா நகரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின்கீழ் ரூ.9.8 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலை பணிகளையும், ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் மரக்கன்றுகளுக்கிடையே அகழி வெட்டும் பணிகளையும் பார்வையிட்டார்.

மேலும், தேசிய ஊரக வேலை உறுதிதிட்ட பணியாளர்களுக்கு 100 நாட்கள் பணி முழுமையாக வழங்கப்படுகிறதா?, பணிக்கான முழு ஊதியம் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறதா? என்பது குறித்து பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.

பின்னர் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.8 லட்சத்து 38 ஆயிரம் மதிப்பீட்டில் சிமெண்டு சாலையுடன் கூடிய வடிகால் வாய்கால் அமைக்கும் பணி, பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் ரூ.2 லட்சத்து 76 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வீடுகளின் கட்டுமான பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

எலியாத்தூர்

தொடர்ந்து, எலியத்தூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 15-வது நிதி குழு மானிய திட்டத்தில் ரூ.80 ஆயிரம் மதிப்பீட்டில் சமையற்கூடம் சீரமைப்பு பணி, குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.25 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 2 வகுப்பறை கொண்ட பள்ளிகட்டிடத்தின் கட்டுமான பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை அவர் ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது, முடிவு பெறாத அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவருமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் ஷ்ரவன் குமார் உத்தரவிட்டார்.

ஆய்வின் போது, சின்னசேலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிசங்கர், ஜெகநாதன், ஊராட்சி ஒன்றிய உதவிபொறியாளர்கள் ராஜசேகர், நமச்சிவாயபுரம் ஊராட்சி மன்ற தலைவர்கள் தமிழ்ச்செல்வி கோவிந்தன், லோகநாதன், ஊராட்சி மன்ற துணை தலைவர் பச்சையம்மாள் அண்ணாமலை, மற்றும் ஆற்றல்அரசன் உள்ளிட்ட பணி மேற்பார்வையாளர்கள், ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.


Next Story