நவீன எந்திரம் மூலம் சிமெண்டு சாலை அமைக்கும் பணிகளை கலெக்டர் ஆய்வு

நவீன எந்திரம் மூலம் சிமெண்டு சாலை அமைக்கும் பணிகளை கலெக்டர் ஆய்வு
x

அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றி மாடவீதிகளில் சிமெண்டு சாலை பணிகள், பாதாள சாக்கடை பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இதனை ஆய்வு செய்த கலெக்டர், அனைத்து பணிகளையும் இந்த மாத இறுதிக்குள் முடிக்க அறிவுறுத்தினார்.

திருவண்ணாமலை

சிமெண்டு சாலை பணிகள்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள மாட வீதியில் சிமெண்டு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இந்த பணியினை கலெக்டர் முருகேஷ் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

அருணாசலேஸ்வரர் கோவில் மாட வீதியில் பே கோபுரத் தெரு சந்திப்பு பகுதியில் இருந்து காந்தி சிலை வரை என 1000 மீட்டர் அளவில் நவீன எந்திரங்களை கொண்டு நெடுஞ்சாலை துறையின் மூலம் புதியதாக சிமெண்டு சாலை அமைக்கும் பணிகள், மின் பகிர்மான கழகம் சார்பில் மின் வடம் பதித்தல் பணிகள், நகராட்சி சார்பில் பாதாள சாக்கடை ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன.

அனைத்தும் பணிகளும் முழுஅளவில் முடியும் தருவாயில் உள்ளது.

முடிக்க அறிவுறுத்தல்

தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் இறுதிக் கட்ட பணியினை போர்கால அடிப்படையில் மேற்கொண்டு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். அனைத்து பணிகளையும் இந்த மாத இறுதிக்குள் நிறைவு செய்ய வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்றார்.

ஆய்வின்போது திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி, நகராட்சி ஆணையர் தட்சிணாமூர்த்தி, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ரகுராமன், மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் பழனிராஜ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story