சூளகிரி ஒன்றியத்தில்வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் சரயு ஆய்வு
சூளகிரி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
சூளகிரி:
சூளகிரி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இம்மிடிநாயக்கனபள்ளி, சென்னப்பள்ளி, உல்லட்டி, காமன்தொட்டி, போகிபுரம், ஊராட்சிகளில், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும். முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் திட்டம், தனிநபர் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகள், பள்ளி கட்டிடங்கள் சீரமைப்பு பணிகளுக்கு முக்கியத்துவம் வழங்கி பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
அங்கன்வாடி மையம்
முன்னதாக கலெக்டர் சரயு ஏனுசோனை கிராம நிர்வாக அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு கிராம கணக்குகள், அடங்கல், பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்ட பதிவேடுகள், முதியோர் உதவித்தொகை பெறுவோரின் விவர பதிவேடுகள், ஆன்லைன் சான்றிதழ்கள் விவர பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டு பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும் என கிராம நிர்வாக அலுவலருக்கு உத்தரவிட்டார்.
மேலும் காமன்தொட்டி அருகே போடூரில் உள்ள அங்கன்வாடி மையத்திலும் கலெக்டர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விமல் ரவிகுமார், பாப்பி பிரான்சினா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் டென்சிங், காமராஜ் மற்றும் பொறியாளர்கள் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.