தர்மபுரியில் இன்று முதல் 10 நாட்கள்100 அரங்குகளுடன் புத்தக திருவிழாமுன்னேற்பாடு பணிகளை கலெக்டர் சாந்தி ஆய்வு


தர்மபுரியில் இன்று முதல் 10 நாட்கள்100 அரங்குகளுடன் புத்தக திருவிழாமுன்னேற்பாடு பணிகளை கலெக்டர் சாந்தி ஆய்வு
x
தர்மபுரி

தர்மபுரி

தர்மபுரியில் இன்று (சனிக்கிழமை) முதல் 100 அரங்குகளுடன் தொடங்கும் புத்தக திருவிழா முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் சாந்தி நேரில் ஆய்வு செய்தார்.

புத்தக திருவிழா

தர்மபுரி மாவட்ட நிர்வாகம், தகடூர் புத்தகப்பேரவை மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் 5-ம் ஆண்டு புத்தக திருவிழா இன்று (சனிக்கிழமை) முதல் வருகிற 17-ந் தேதி வரை ௯ நாட்கள் தர்மபுரி வள்ளலார் திடலில் நடைபெற உள்ளது. இந்த புத்தக திருவிழாவில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த விழாவில் தினமும் காலை முதல் இரவு வரை புத்தக கடைகள் திறந்திருக்கும்.

தினமும் மாலை 7 மணியில் இருந்து 8.30 மணி வரை சொற்பொழிவு மற்றும் கருத்தரங்குகள் நடைபெற உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், சிறுவர்-சிறுமிகள், போட்டி தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் புத்தக அரங்குகள், சிறுதானியங்களுக்கான உணவு அரங்குகள், அரசின் திட்டங்கள் தொடர்பான கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. இந்த விழாவில் பள்ளி, கல்லூரிகளில் பயின்று வரும் மாணவ, மாணவிகளுக்கு 10 முதல் 20 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கலெக்டர் நேரில் ஆய்வு

இந்த நிலையில் புத்தக திருவிழா முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் சாந்தி நேற்று மாலை ஆய்வு மேற்கொண்டார். புத்தக அரங்குகள், அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது உதவி கலெக்டர் கீதா ராணி, தகடூர் புத்தக பேரவை செயலாளர் டாக்டர் செந்தில், தலைவர் சிசுபாலன், தாசில்தார் ஜெயசெல்வம் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் உடன் இருந்தனர்.


Next Story