ரேஷன் கடையில் கலெக்டர் ஆய்வு


ரேஷன் கடையில் கலெக்டர் ஆய்வு
x

குடவாசல் அருகே ரேஷன் கடையில் கலெக்டர் ஆய்வு செய்தார்.

திருவாரூர்

குடவாசல்;

குடவாசல் அருகே உள்ள மஞ்சக்குடி ரேஷன் கடையில் திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அப்போது எடை கருவிகள் மற்றும் உணவுப் பொருட்கள் சரியான அளவில் உள்ளதா? என ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-ஏழை எளிய மக்களுக்கு சென்றடைய வேண்டிய திட்டங்கள் முழுமையாக சென்று அடைய அதிகாரிகள் முழு கவனம் செலுத்த வேண்டும். அனைத்து ரேஷன் கடைகளிலும் உணவு பொருட்கள் மழை நீரால் நனையாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். எந்த ஒரு குடும்ப அட்டைதாரருக்கும் உணவு பொருட்கள் கிடைக்கவில்லை என்ற புகார்கள் வராமல் விற்பனையாளர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் என கூறினார். ஆய்வின் போது தாசில்தார் குருநாதன் உள்பட அதிகாரிகள் இருந்தனர்.


Next Story