கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் பயிற்சி கலெக்டர் தகவல்
திருவள்ளூரை சேர்ந்த கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் டாக்டர். ஆஸ்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர்,
தமிழ்நாடு கட்டுமான கழகத்தால் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கு 3 மாத கால திறன் பயிற்சி மற்றும் ஒருவார கால திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. பயிற்சி பெறும் கட்டுமான தொழிலாளர்களின் கல்வி தகுதி 5-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 மற்றும் ஐ.டி.ஐ. ஆகும். வயது வரம்பு 18-ல் இருந்து 40-ஆக இருத்தல் வேண்டும். கொத்தனார், மின்சார பயிற்சி, குழாய் பொருத்துனர், மர வேலை, தச்சு வேலை உள்ளிட்ட தொழில்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இந்த பயிற்சிக்கு கட்டணம் ஏதும் கிடையாது, உணவு, தங்குமிடம் ஆகியவை இலவசமாக வழங்கப்படும். பயிற்சி பெறுபவர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்க ஏற்பாடு செய்யப்படும். இதில் பயிற்சிக்கு தமிழ் எழுத, படிக்க தெரிந்தால் போதுமானது.
திறன் பயிற்சி
செங்கல்பட்டு மாவட்டம் தையூரில் உள்ள தமிழ்நாடு கட்டுமான கழகத்தில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி பெறுபவர் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்து, 3 வருடம் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.
இப்பயிற்சிகள் வருகின்ற ஆகஸ்ட் 15-ந் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. மேலும் விவரங்கள் அறிய திருவள்ளூரில் உள்ள சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தை அனுகுமாறு தொழிலாளர் உதவி ஆணையர் என்.கே.தனபாலன் தெரிவித்துள்ளார்.