கலெக்டர் தலைமையில் ஜமாபந்தி; ஏராளமான மக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்


கலெக்டர் தலைமையில் ஜமாபந்தி; ஏராளமான மக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்
x

பாளையங்கோட்டை தாலுகா அலுவலகத்தில் 5-வது நாளாக நேற்று கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை தாலுகா அலுவலகத்தில் 5-வது நாளாக நேற்று கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.

ஜமாபந்தி

வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி ஒவ்வொரு ஆண்டும் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் நடைபெறும். இந்த ஜமாபந்தி அதிகாரியாக உதவி கலெக்டர் நிலையில் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள்.

ஒரு தாலுகாவிற்கு கலெக்டர் ஜமாபந்தி அதிகாரியாகவும் நியமிக்கப்படுவார். இந்த ஜமாபந்தியில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களான பட்டா மாற்றம், இலவச வீட்டுமனை பட்டா, பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை கொடுப்பார்கள். அந்த மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்படும்.

நெல்லை மாவட்டத்தில் உள்ள நெல்லை, பாளையங்கோட்டை, சேரன்மாதேவி, நாங்குநேரி, ராதாபுரம், மானூர், திசையன்விளை, அம்பை ஆகிய தாலுகாக்களில் கடந்த 24-ந்தேதி ஜமாபந்தி தொடங்கியது.

கலெக்டர் மனு வாங்கினார்

பாளையங்கோட்டை தாலுகா ஜமாபந்தி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள கலெக்டர் கார்த்திகேயன், தினமும் பாளையங்கோட்டை தாலுகா அலுவலகத்தில் அமர்ந்து பாளையங்கோட்டை தாலுகாவுக்கு உட்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களின் கணக்குகளை சரிபார்த்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கி வருகிறார்.

5-வது நாளான நேற்று ஏராளமான பொதுமக்கள் பட்டா மாற்றம், பட்டாவில் பெயர் மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகள் மனுக்களை கொடுத்தனர். அந்த மனுக்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


Next Story