கோபி பஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு பழுதடைந்த குடிநீர் குழாய்களை மாற்ற அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு


கோபி பஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு பழுதடைந்த குடிநீர் குழாய்களை மாற்ற அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
x

கோபி பஸ் நிலையத்தில் ஆய்வு செய்த கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, பழுதடைந்த குடிநீர் குழாய்களை மாற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஈரோடு

கடத்தூர்

கோபி பஸ் நிலையத்தில் ஆய்வு செய்த கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, பழுதடைந்த குடிநீர் குழாய்களை மாற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கடைகளை ஆய்வு

கோபி பஸ் நிலையத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.32 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பில் நவீன பொதுக் கழிப்பறை, ரூ.66 லட்சம் மதிப்பில் கடைகளும் கட்டப்பட்டு உள்ளன. இந்த கட்டிடங்களை மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் பஸ் நிலையத்தில் நகராட்சி சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் கட்டண கழிப்பறைக்கு சென்று சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா?, துர்நாற்றம் வீசுகிறதா?, கழிவு நீர் தேங்கி உள்ளதா? என்று ஆய்வு செய்தார். பின்னர் பழுதடைந்த தண்ணீர் குழாய்களை உடனே மாற்றவேண்டும் என்று நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

நுண்ணுயிர் உரமாக்கல் மையம்

இதேபோல் மின்நகரில் கட்டப்பட்டுள்ள பூங்கா, ராமர் குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வரும் குப்பை எரியூட்டு மையம் மற்றும் நுண்ணுயிர் உரமாக்கல் மையம், மொடச்சூர் சந்தையில் புதிதாக கட்டப்பட்டு வரும் கடைகளின் பணிகள், கோபி தினசரி மார்க்கெட்டில் புதிதாக கட்டப்பட்ட வரும் கட்டிட பணிகள், அறிவு சார் மைய கட்டிட பணிகள் ஆகியவற்றையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது நகராட்சி தலைவர் என்.ஆர்.நாகராஜ், பொறியாளர் சிவக்குமார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Related Tags :
Next Story