கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தேசிய கொடி ஏற்றினார்

ராணிப்பேட்டையில் நடந்த குடியரசுதின விழாவில் கலெக்டர் அமர்குஷ்வாஹா தேசிய கொடியேற்றி வைத்து, ரூ.1 கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கலெக்டர் கொடியேற்றினார்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 74-வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நடந்த குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் சமாதான புறாக்களை கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி சுந்தரம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் ஆகியோர் பறக்கவிட்டனர். இதனை தொடர்ந்து கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் காவல் துறையின் அணிவகுப்பை பார்வையிட்டு, தொடர்ந்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர்.
நலத்திட்ட உதவி
இதனைத் தொடர்ந்து தொழில் வணிகத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, கூட்டுறவுத் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் 221 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 14 லட்சத்து 30 ஆயிரத்து 190 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
மேலும் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 826 பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும், 21 காவலர்களுக்கு முதல்-அமைச்சரின் காவலர் பதக்கங்களையும் வழங்கி கவுரவித்தார். பள்ளி மாணவ- மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி சுந்தரம், வருவாய் கோட்டாட்சியர்கள் வினோத்குமார், பாத்திமா, தனித்துணை கலெக்டர் தாரகேஸ்வரி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ் உள்பட அனைத்துத் துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தியின் உருவ சிலைக்கு கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.