நாமக்கல் குறைதீர்க்கும் கூட்டத்தில் ரூ.2.36 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்; கலெக்டர் உமா வழங்கினார்


நாமக்கல் குறைதீர்க்கும் கூட்டத்தில் ரூ.2.36 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்; கலெக்டர் உமா வழங்கினார்
x
தினத்தந்தி 13 Jun 2023 12:30 AM IST (Updated: 13 Jun 2023 3:46 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் 21 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 36 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் உமா வழங்கினார்.

நாமக்கல்

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் 21 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 36 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் உமா வழங்கினார்.

குறைதீர்க்கும் கூட்டம்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் உமா தலைமையில் நடந்தது.

இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி மொத்தம் 353 மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் வழங்கினர். இந்த மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர், மனுக்களை பரிசீலனை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

நலத்திட்ட உதவிகள்

இதனை தொடர்ந்து வருவாய் துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா, சமூக நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு தையல் எந்திரம், வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு மானியத்துடன் கூடிய சிறுதளைகள் இடுபொருட்கள் என்பன உள்பட மொத்தம் 21 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 36 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

தொடர்ந்து அவர் தரைதளத்தில் மாற்றுத்திறனாளிகளை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று, துறை அலுவலரிடம் வழங்கி அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பிரபாகரன் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story