நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில்தானியங்கி மஞ்சப்பை வழங்கும் எந்திரம்
ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பைக்கு மாற்றாக சுற்றுச்சூழல் பாதுகாப்பினை கருதி முதல்-அமைச்சரின் "மீண்டும் மஞ்சப்பை" விழிப்புணர்வு தமிழகம் எங்கும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு அங்கமாக தானியங்கி மஞ்சப்பை வழங்கும் எந்திரம் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு உள்ளது.
இதை மாவட்ட கலெக்டர் உமா நேற்று பொது மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார். மேலும் மஞ்சப்பையின் முக்கியத்துவம் குறித்து பொது மக்களுக்கு எடுத்துரைத்தார். மேலும், ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பனை, மூங்கில், வாழை மட்டை மற்றும் இதர விவசாய பொருள்களை பயன்படுத்தி தயாரிக்கப்படும் மாற்றுப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு, பொது மக்களால் பார்வையிடப்பட்டது. இந்த நிகழ்வின்போது பொதுமக்களுக்கு மஞ்சப்பை மற்றும் மரக்கன்றுகளை கலெக்டர் வழங்கினார்.