காவேரிப்பட்டணத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டரிடம் கோரிக்கை


காவேரிப்பட்டணத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டரிடம் கோரிக்கை
x
தினத்தந்தி 17 April 2023 11:55 PM IST (Updated: 18 April 2023 1:05 PM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

காவேரிப்பட்டணம் அடுத்த எர்ரஅள்ளி ஊராட்சியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் காவேரிப்பட்டணம் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தை சுற்றி அரசு நிலத்தை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு கூடும் இளைஞர்கள், அந்த வழியாக பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகளை கேலி செய்தும், வாகனங்களை நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறும் செய்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் இருசக்கர வாகனங்கள் திருட்டும் அதிகரித்துள்ளது.

நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து, சார் பதிவாளர் அலுவலகத்தை சுற்றி கட்டப்பட்ட கடைகளை அகற்ற வேண்டுமென பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே பதிவாளர் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் நலன் கருதி ஆக்கிரமிப்பு கடைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.


Next Story