விக்கிரவாண்டி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டா் ஆய்வு
விக்கிரவாண்டி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டா் ஆய்வு செய்தாா்.
விக்கிரவாண்டி,
விக்கிரவாண்டி ஒன்றியம் ரெட்டிக்குப்பம் கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.11.75 லட்சம் மதிப்பீட்டில் ரேஷன் கடை கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இப்பணியை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணியை தரமாகவும் விரைந்து முடிக்குமாறும், பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.அதைத்தொடர்ந்து கயத்தூர் கிராமத்தில் மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.7.42 லட்சத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சமையல் கூடம் கட்டும் பணி, அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.2.40 லட்சத்தில் பயனாளிகளுக்கு கட்டப்பட்டு வரும் வீடுகள் உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகளையும் மாவட்ட கலெக்டர் பழனி பார்வையிட்டார்.
மேலும் கயத்தூரில் 30 ஆயிரம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பார்வையிட்ட அவர் குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் தேதி மற்றும் முறையாக சுத்தம் செய்யப்படுகிறதா? என்பது குறித்து கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர், முபாரக் அலி பேக், ஒன்றிய பொறியாளர்கள் இளையராஜா, நடராஜன், கருணாகரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் கமலக்கண்ணன், செல்வி முருகையன், ஊராட்சி செயலாளர்கள் வெங்கடேசன், சித்ரா உள்பட பலா் உடனிருந்தனர்.