கோவை ஃபிட்ஜி மாணவிகளின் அபார வெற்றி
கோவை ஃபிட்ஜி (FIITJEE) இல் படித்த இரண்டு மாணவிகள் ஜேஇஇ மற்றும் நீட் நுழைவுத் தேர்வில் அபார வெற்றி பெற்றுள்ளனர்
கோவை ஃ பிட்ஜிFIITJEE) இல் படித்த இரண்டு மாணவிகள் ஜேஇஇ மற்றும் நீட் நுழைவுத் தேர்வில் அபார வெற்றி பெற்றுள்ளனர். ஐஐடி மற்றும் இந்தியாவின் உலகத் தரம் வாய்ந்த மருத்துவ கல்லூரிகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுக்கான பயிற்சியை கோவை ஃபிட்ஜியின் பினக்கள் மற்றும் ஜெனித் ப்ரோக்ராம்களில் படித்த தீக்ஷா திவாகர் மற்றும் எம் ஹரிணி என்ற இரண்டு மாணவிகள் தங்கள் புத்தி கூர்மையை வெளிப்படுத்தி 2022 ஆம் ஆண்டின் ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகளில் அபார வெற்றியை பெற்றுள்ளனர்.
ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வில் 1,55,438 மாணவர்கள் கலந்து கொள்ள, அதில் 40,712 மாணவர்கள் இந்தியாவின் புகழ்பெற்ற ஐஐடி கல்வியகத்தில் சேர தகுதி பெற்றனர் இதில் கோவை ஃபிட்ஜியில் பயின்ற தீக்ஷா திவாகர் ஜேஇஇ அட்வான்ஸ் 2022 தேர்வில், ஏஐஆர் (ஆல் இந்தியா ரேங்கிங்) தரவரிசையில் 154 ஆவது இடத்தைப் பெற்று தமிழகத்தில் மாணவிகளில் முதலிடத்தை பெற்றுள்ளார்.
ஜூலை மாதம் நடைபெற்ற நீட் 22 தேர்வில் மருத்துவம் படிப்பிற்கான தேர்வில்18,70,015 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 8.07,538 மாணவர்களும் 10,64,794 மாணவிகளும் கலந்து கொண்டனர். நாட்டின் சிறப்பு வாய்ந்த மருத்துவ கல்லூரிகளில் சேர எழுதும் இந்த தேர்வில் ஹரிணி ஆல் இந்தியா ரேங்கிங் இல் 43வது தரவரிசையை பெற்று தமிழகத்தில் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளார் இவர் 7௦2 மதிப்பெண் பெற்று தமிழகத்தின் முதல் மாணவியாகவும் தேர்வு பெற்றுள்ளார்.
கோவை ஃபிட்ஜியின் கல்வி குழு தீவிரமான ரிவிஷன் வகுப்புகளையும் மாதிரி தேர்வுகளையும் தொடர்ச்சியாக மாணவர்களுக்கு கொடுத்து அவர்களை தயார் செய்ததினால் ஜெஇஇ மற்றும் நீட் தேர்வுகளில் மாணவர்கள் சிறப்பாக பரிணமிக்க முடிந்தது.
கோவை ஃபிட்ஜியின் இந்த வெற்றியை கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பரிசளிப்பு விழாவில் பேசிய மாணவி தீக்ஷா, "ஜேஇஇ தேர்வில் என்னுடைய வெற்றியை நினைத்து எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சிறந்த ஆசிரியர்கள, இங்கு எங்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்ட முறை மற்றும் பயிற்சி தேர்வுகள் போன்றவற்றினால் தான் என்னால் இந்த வெற்றியை அடைய முடிந்தது. அவர்களுக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்". ஹரிணி பேசுகையில், "என்னுடைய வெற்றிக்கு காரணம் தொடர்ச்சியாக கொடுக்கப்பட்ட மாதிரி தேர்வுகளும், தேர்வு முடிவுகளின் கருத்துக்களும் தான். பாடங்களை தெளிவாக புரிந்து கொள்ள எனக்கு இந்த தேர்வு முடிவுகள் மிகவும் உபயோகமாக இருந்தது.
மேலும் நான் என் பெற்றோருக்கும் நண்பர்களுக்கும் அவர்கள் அளித்த உற்சாகத்திற்கும் உதவிக்கும் கடன் பட்டிருக்கிறேன் என்றார். ஜெஇஇ மற்றும் நீட் 2022 தேர்வில் சிறப்பான வெற்றியைப் பெற்ற தீக்ஷா மற்றும் ஹரிணி ஆகியோரை பாராட்டி பேசிய கோவை ஃபிட்ஜியின் தலைவர் திரு ஜெகதீஷ் குமார் "சிறப்பான வெற்றியை பெற்ற எங்கள் மாணவிகளை வாழ்த்துவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இந்த கடினமான தேர்வில் சிறந்த வெற்றியை இவர்கள் பெற்றிருப்பது எங்களின் மற்ற மாணவர்களுக்கும் குறிப்பாக பெண் குழந்தைகளுக்கும் ஒரு சிறந்த உற்சாகத்தையும் நம்பிக்கையும் அளிக்கும்.
பொறியியல் மற்றும் மருத்துவத்துறையில் பரிணமிக்க இவர்கள் நம்பிக்கை அளிக்க கூடியவர்களாக விளங்குகிறார்கள். எங்கள் மேல் நம்பிக்கை கொண்டு எங்களிடம் பயிற்சி பெற்று தங்களின் திறமைகளை இத்தேர்வின் வெற்றி மூலம் வெளிக்காட்டிய மாணவி தீக்ஷா மற்றும் ஹரிணிக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் எங்களுடைய நன்றிகளையும் நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களுக்கு கோவை ஃபிட்ஜியின் சார்பாக எங்களின் மனமார்ந்த பாராட்டுக்களையும் எதிர்காலத்தில் அவர்கள சிறந்த வெற்றிகளை பெறவும் வாழ்த்துகிறோம்" என்று கூறினார்.