"காபி வித் கான்ஸ்டபிள்" கலந்துரையாடல் நிகழ்ச்சி


காபி வித் கான்ஸ்டபிள் கலந்துரையாடல் நிகழ்ச்சி
x

பெரம்பலூரில் "காபி வித் கான்ஸ்டபிள்" கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட போலீசாரின் நலன் மற்றும் போலீசாரை மேம்படுத்தும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி "காபி வித் கான்ஸ்டபிள்" என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியை போலீஸ் அலுவலகத்தில் நடத்தி வருகிறார். அதன்படி இந்த வாரம் மாவட்ட ஆயுதப்படை மற்றும் சட்டம் ஒழுங்கு, சிறப்பு பிரிவு ஆகியவற்றில் பணிபுரியும் போலீஸ்காரர் முதல் ஏட்டு வரை உள்ளவர்களில் ஆர் என்ற ஆங்கில எழுத்தில் பெயர் தொடங்கும் போலீசார்களில் தோராயமாக 16 பேரை தேர்ந்தெடுத்து மாவட்ட போலீசாரை மேம்படுத்தும் வகையில் அவர்களுடன் போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி கலந்துரையாடல் நடத்தினார். மேலும் அவர் இந்த நிகழ்ச்சியானது ஒவ்வொரு வாரமும் நடைபெறும் என்றும் தெரிவித்தார். இந்த கலந்துரையாடல் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியும் போலீசாரின் குறை, நிறைகள் மற்றும் மாவட்ட போலீசாரை மேம்படுத்தும் ஆலோசனைகள் பெறப்பட்டு, அதனை நடைமுறைபடுத்தப்படவுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியும் போலீசாரின் மனநிலையை அறிந்து, அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.


Next Story