தர்மபுரி ஏல அங்காடிக்கு பட்டுக்கூடுகள் வரத்து அதிகரிப்பு

தர்மபுரி
தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இந்த அங்காடிக்கு நேற்று முன்தினம் 1,757 கிலோவாக இருந்த பட்டுக்கூடுகள் வரத்து நேற்று 2,899 கிலோவாக அதிகரித்தது. நேற்று முன்தினம் அதிகபட்சமாக ரூ.547-க்கு விற்பனையான ஒரு கிலோ பட்டுக்கூடு நேற்று கிலோவிற்கு ரூ.3 குறைந்தது. நேற்று ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.547-க்கும், குறைந்தபட்சமாக ரூ.250-க்கும், சராசரியாக ரூ.411.91-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.11 லட்சத்து 94 ஆயிரத்து 325-க்கு பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.
Related Tags :
Next Story