விவசாயிகளுக்கு மானிய விலையில் தென்னங்கன்றுகள்
ஆலங்குளம் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன.
ஆலங்குளம்:
தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தமிழ்மலர் ஆலங்குளம் வட்டாரத்தில் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். வேளாண்மை துறை மூலம் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த பண்ணையம், பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சி திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் தரிசுநில தொகுப்பு அமைத்தல், பண்ணைகருவிகள் தொகுப்பு மற்றும் அட்மா திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்தார். மேலும் ஆலங்குளம் விரிவாக்க மைய கிடங்ைகயும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் புதிதாக கட்டுவது தொடர்பான பணியையும் கள ஆய்வு செய்தார்.
தொடர்ந்து அட்மா திட்டத்தில் முப்பிடாதி என்ற விவசாயிக்கு மின்கலம் மூலம் இயங்கும் தெளிப்பான் கருவியை மானியத்தில் வேளாண்ைம இணை இயக்குனர் தமிழ்மலர் வழங்கினார். பின்னர் 300 விவசாயிகளுக்கு தலா 2 தென்னங்கன்றுகளை மானியத்தில் வழங்கினார். நிகழ்ச்சியில் வேளாண்மை உதவி இயக்குனர் அறிவழகன், வேளாண்மை அலுவலர் சண்முகப்பிரியா, உதவி வேளாண்மை அலுவலர்கள் செந்தில்குமார், கணேசன், புஷ்பமாரி, உதவியாளர் (பிணையம்) குமரேசன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஸ்டேன்லி, உதவி தொழில்நுட்ப மேலாளர் செல்வகணேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.