தென்னை விவசாயிகள் தேங்காய் உடைக்கும் போராட்டம்


தென்னை விவசாயிகள் தேங்காய் உடைக்கும் போராட்டம்
x
தினத்தந்தி 13 July 2023 12:30 AM IST (Updated: 13 July 2023 5:29 PM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் தென்னை விவசாயிகள் தேங்காய் உடைக்கும் போராட்டம் நடத்தினர்.

தென்காசி

தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தென்காசி புதிய பஸ்நிலையம் அருகில் தேங்காய் உடைக்கும் போராட்டம் நேற்று நடைபெற்றது. உரித்த தேங்காய் 1 கிலோ ரூ.50-க்கு தமிழக அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். கொப்பரை தேங்காய் 1 கிலோவிற்கு ரூ.140 மத்திய அரசு வழங்க வேண்டும். இதற்கு மாநில அரசு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். ஆண்டு முழுவதும் கொப்பரையை கொள்முதல் செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் மானிய விலையில் தேங்காய் எண்ணெய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் மீரா கனி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் அப்துல் காதர் அவுலியா முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் விஜய முருகன், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் கணபதி, மாவட்ட தலைவர் வேணுகோபால், பொருளாளர் திருமலை குமாரசாமி, துணைத்தலைவர்கள் வேலு மயில், ராகவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 3 தேங்காய்களை தரையில் உடைத்தனர். அப்போது போலீசார் அவர்களை மேலும் தேங்காய்களை உடைக்காமல் அவர்களிடமிருந்து வாங்கிச் சென்றனர். பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


Next Story