கால்நடை, மீன்வளத்துறைகள் சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்கள் - முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்
புதிதாக அமைக்கப்பட்டுள்ள கட்டடங்களை காணொலி காட்சி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை,
கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் சார்பில் 189 கோடியே 49 லட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 47 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் மாவட்ட கால்நடை பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.
அதே போல் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் 61 கோடியே 32 லட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ள. இவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
அதைத் தொடர்ந்து கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில், பட்டு விவசாயிகளுக்கான நலத்திட்ட உதவிகள், நூற்பாளர்களுக்கு 6 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை ஆகியவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
Related Tags :
Next Story