500 டாஸ்மாக் கடைகள் மூடல்; திசைதிருப்பும் நடவடிக்கை - முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் விமர்சனம்


500 டாஸ்மாக் கடைகள் மூடல்; திசைதிருப்பும் நடவடிக்கை - முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் விமர்சனம்
x

அமலாக்கத்துறையால் ஏற்பட்ட பாதிப்பை திசைதிருப்ப டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக ஜெயகுமார் தெரிவித்தார்.

சென்னை,

தமிழ்நாட்டில் 500 சில்லறை விற்பனை டாஸ்மாக் கடைகள் நாளை முதல் மூடப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான அரசாணை வெளியான நிலையில் நாளை முதல் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மண்டல வாரியாக மூடப்படும் 500 டாஸ்மாக் கடைகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் 138, கோவையில் 78, மதுரையில் 125, சேலத்தில் 59, திருச்சியில் 100 டாஸ்மாக் கடைகள் நாளை முதல் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டாஸ்மாக் கடைகளை மூடுவது திசைதிருப்பும் நடவடிக்கை என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமலாக்கத்துறையால் ஏற்பட்ட பாதிப்பை திசைதிருப்பவே 500 டாஸ்மாக் கடைகளை மூடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று தெரிவித்தார்.


Next Story