மதுபானக் கூடங்களை மூடுங்கள்... விதிகளுக்கு புறம்பாக செயல்பட்ட 5 ஸ்டார் ஓட்டல்களுக்கு அதிரடி உத்தரவு


மதுபானக் கூடங்களை மூடுங்கள்... விதிகளுக்கு புறம்பாக செயல்பட்ட 5 ஸ்டார் ஓட்டல்களுக்கு அதிரடி உத்தரவு
x

கோப்புப்படம்

சென்னையில் 5 தனியார் ஸ்டார் ஓட்டல்களின் மதுபானக் கூடங்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னையில் விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்பட்டு வந்த 5 தனியார் ஸ்டார் ஓட்டல்களின் மதுபானக் கூடங்கள் உரிமங்களை ரத்து செய்து, உடனடியாக மூட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையர் கார்த்திகா உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை மாநகரில் உள்ள ரட்டா சோமர்செட், தாஜ் கிளப் ஹவுஸ், வி.வி.ஏ. ஓட்டல்ஸ் (ரேடிசன் ப்ளு), ஹையத் ரீஜன்சி, தி பார்க் ஆகிய 5 தனியார் ஸ்டார் ஓட்டல்களில் எப்.எல்.-3 மதுபானக் கூடங்கள் அரசு உரிமம் பெற்று இயங்கி வந்தன. அவற்றுள் சட்டவிதிகளுக்கு மாறாக வெளிநபர்களை மது அருந்த அனுமதித்தல், மதுபானங்களை வினியோகம் செய்தல் முதலிய குற்றங்களில் ஈடுபட்ட விவரங்கள் தெரியவந்தன.

ஆதலால், சென்னை மாநகரில் விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்பட்டு வந்த 5 ஸ்டார் ஓட்டல்களிலும் செயல்பட்டு வந்த மதுபானக் கூடங்களை நடத்துவதற்கு வழங்கப்பட்டிருந்த எப்.எல்.-3 உரிமங்களைத் தற்காலிகமாக ரத்து செய்தும் அந்த மதுபானக் கூடங்களை உடனடியாக மூடவும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story