போலி டாக்டர் நடத்திய கிளினிக்குக்கு 'சீல்'
போலி டாக்டர் நடத்திய கிளினிக்குக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
பேரணாம்பட்டு
போலி டாக்டர் நடத்திய கிளினிக்குக்கு 'சீல்' வைக்கப்பட்டது.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டை அடுத்த அழிஞ்சிகுப்பம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி எதிரில் மருந்து கடை நடத்தி வரும் குப்புசாமி என்பவர் வாடகைக்கு வீடு எடுத்து கிளீனிக் நடத்தி, ஆங்கிலம் மருத்துவம் படிக்காமல் சுற்றுப்புற கிராம மக்களுக்கு ஊசி போட்டு மருத்துவ சிகிச்சையளித்து வருவதாகவும், இதே போன்று அழிஞ்சிக்குப்பம் கிராமத்தில் வெற்றி நகரில் ஓய்வுபெற்ற செவிலியர் சாந்தி என்பவர் கிளீனிக் நடத்தி ஆங்கில மருத்துவ சிகிச்சையளித்து வருவதாகவும் மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் கண்ணகிக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அவரது தலைமையில் குடியாத்தம் அரசு மருத்துவமனை மருத்துவ அதிகாரி டாக்டர் மாறன்பாபு, மருந்து ஆய்வாளர் ஹேமலதா, ராஜக்கல் கிராம நிர்வாக அலுவலர் யோகானந்தம் ஆகியோர் போலீஸ் பாதுகாப்புடன் குப்புசாமி, சாந்தி ஆகியோர் நடத்தி வந்த கிளீனிக்குகளில் திடீர் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் மேற்கண்ட 2 பேரும் ஆங்கில மருத்துவ சிகிச்சையளித்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து குப்புசாமியின் கிளீனிக்கிற்கு பூட்டி 'சீல்' வைக்கப்பட்டது.
ஓய்வுபெற்ற செவிலியர் சாந்தி நடத்தி வந்த கிளீனிக்கில் ஊசி, மருந்துகள் ஆகியவற்றை மருத்துவ குழுவினர் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து டாக்டர் மாறன்பாபு கொடுத்த புகாரின் பேரில் மேல்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.