காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு பயிலரங்கம்


காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு பயிலரங்கம்
x

காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு பயிலரங்கம் அரியலூரில் நடைபெற்றது.

அரியலூர்

காலநிலை கொள்கை மற்றும் திட்டமிடலின் முக்கியத்துவத்தை கருதி 2021-2022-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட பட்ஜெட் அறிவிப்பின்படி, தமிழ்நாடு பருவநிலை மாற்ற இயக்கத்தை மாநில அரசு தொடங்கியுள்ளது. மேலும் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு பயிலரங்கம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையின் அரியலூர் மாவட்ட செயற்குழு சார்பில் மாவட்ட அளவிலான விழிப்புணர்வு பயிலரங்கம் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலெக்டர் கூறுைகயில், அரியலூர் மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு மீண்டும் மஞ்சப்பை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தடுக்க முடியும். மாவட்டத்தில் அதிகளவில் கரும்பு மற்றும் சிமெண்டு ஆலைகள் உள்ளன. இவற்றால் ஏற்படும் மாசுவை கட்டுப்படுத்த வேண்டும். இதுகுறித்து பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார். இந்த பயிலரங்கத்திற்கு மாவட்ட வனத்துறை மற்றும் காலநிலை அலுவலர் இளங்கோவன், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தின் இணை இயக்குனர் சவுமியா, வனச்சரக அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story