தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டம்


தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டம்
x

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்க தலைவர் மோகன் தலைமையில் தூய்மை பணியாளர்கள் நேற்று நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் குவிந்தனர். அங்கு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், 'நெல்லையில் 750-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கடந்த 15 ஆண்டுகளாக சுயஉதவிக்குழுக்கள் மூலம் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் நேரடியாக சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாநகராட்சி, நகராட்சிகளில் ஒப்பந்த நிறுவனம் மூலம் தூய்மை பணியாளர்களுக்கு வேலை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவ்வாறு செய்தால் ஒப்பந்த ஊழியர்களுக்கு சரியான சம்பளம் கிடைக்காது. இதனால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே பழைய நடைமுறையிலேயே வேலை வழங்க வேண்டும்' என்று வலியுறுத்தினர்.


Next Story