தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டம்


தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டம்
x

விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊராட்சிகளில் பணிபுரியும் ஓட்சா கூட்டமைப்பு தூய்மை பணியாளர் சங்கத்தினர் நேற்று திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாநில பொதுச்செயலாளர் செல்வராசு தலைமை தாங்கினார். இதில் கடந்த 2013-ம் ஆண்டிலிருந்து இது வரை தங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை வழங்கப்படவில்லை. இதனால் நாங்கள் பெரும் சிரமம் அடைந்து வருகிறோம். இதை தவிர்க்க நிலுவை தொகையை உடனே வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி தூய்மை பணியாளர்கள் கோஷங்களை எழுப்பினர்.

நடவடிக்கை

இதில் நிர்வாகிகள் விஜயகுமார், வீரன், ஜெயமணி, சங்கர், இளையராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். இது பற்றி. தகவலறிந்து வந்த விருத்தாசலம் போலீசார் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதனை ஏற்று போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து தூய்மை பணியாளர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story