வருங்கால வைப்பு நிதி அலுவலகம் சார்பில் தூய்மை பணி


வருங்கால வைப்பு நிதி அலுவலகம் சார்பில் தூய்மை பணி
x

வருங்கால வைப்பு நிதி அலுவலகம் சார்பில் தூய்மை பணி நடக்கிறது.

திருநெல்வேலி

நெல்லை மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலக உதவி ஆணையாளர் குமாரவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

நெல்லை மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனமானது "தூய்மை பாரதம்" திட்டத்தின் கீழ் கடந்த 20-ந் தேதி முதல் பல்வேறு தூய்மை பணிகளை செய்து வருகிறது.

"தூய்மையே சேவை" திட்டத்தின் ஒரு பகுதியாக நெல்லை மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தின் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து வருகிற 1-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு பாளையங்கோட்டை என்.ஜி.ஓ.பி.காலனி பகுதியில் உள்ள பெரியகுளம் நீர்நிலையை தூய்மை செய்யும் பணியை மேற்கொள்ள இருக்கிறார்கள். இந்த திட்டத்தில் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story