நெல்லையப்பர் கோவிலில் தூய்மை பணி
நெல்லையப்பர் கோவிலில் தூய்மை பணி நடைபெற்றது.
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் பாண்டிய கால சிவாலயங்களில் பழமையானதாகும். 14 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இக்கோவிலில் கல் இசை தூண்கள் மற்றும் கல் சிற்பங்கள் மற்றும் தூண்களில் பல்வேறு வகையான சிற்பங்கள் உள்ளிட்ட கலையம்சம் பொருந்திய தூண்கள் உள்ளன. இந்த தூண்கள் எண்ணெய் பிசிறுகள் பிடித்தும், சுத்தமில்லாமலும் பக்தர்கள் ஆங்காங்கே விபூதி குங்குமங்களை போட்டு செல்வதால் பழுதடைந்து காணப்பட்டது. மேலும் கோவில்களில் பல்வேறு இடங்களில் உழவாரப் பணிகள் மூலம் தூய்மை செய்யும் பணி ஒவ்வொரு வாரமும் நடந்து வருகிறது.
இந்த நிலையில் நெல்லையப்பர்- காந்திமதி அம்மன் கோவிலில் நேற்று சுவர்கள், கற்சிலைகள் மற்றும் பிரகாரங்களை தண்ணீர் மூலம் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது. நவீன ஏர் கம்ப்ரசர் பைப் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து தூண்கள், சுவர்களில் இருந்த எண்ணெய் பிசுக்கு உள்ளிட்ட அழுக்குகளை நீக்கி சுத்தப்படுத்தினர்.