துப்புரவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


துப்புரவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 Dec 2022 12:15 AM IST (Updated: 2 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டையில் துப்புரவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை,

ஊரக வளர்ச்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில் உளுந்தூர்பேட்டை நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட பொருளாளர் வீராசாமி, கவுரவ தலைவர் தங்கராசு, மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பேசினர். துப்புரவு தொழிலாளர்கள் முதல் மேற்பார்வையாளர் வரை 20 வகையான நிரந்தர பணியிடங்களை அவுட்சோர்சிங் என்கிற பெயரில் தனியார் மயமாக்கும் அரசாணை 152-ஐ ரத்து செய்ய வேண்டும், மாவட்ட கலெக்டர் உத்தரவுபடி துப்புரவு பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.460 ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட துப்புரவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story