சீவல்சரகு, போடிகாமன்வாடி ஊராட்சிகளில் 'நம்ம ஊரு சூப்பரு' திட்டத்தில் தூய்மை பணி


சீவல்சரகு, போடிகாமன்வாடி ஊராட்சிகளில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தில் தூய்மை பணி
x

சீவல்சரகு, போடிகாமன்வாடி ஊராட்சிகளில் ‘நம்ம ஊரு சூப்பரு’ திட்டத்தில் நடந்த தூய்மை பணியை கலெக்டர் விசாகன் ஆய்வு செய்தார்.

திண்டுக்கல்

ஆத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட சீவல்சரகு, போடிகாமன்வாடி ஆகிய 2 ஊராட்சிகளில் 'நம்ம ஊரு சூப்பரு' திட்டத்தின் கீழ் தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் விசாகன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறுகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 306 கிராம ஊராட்சிகளிலும் முதல்-அமைச்சர் அறிவித்த 'நம்ம ஊரு சூப்பரு' திட்டத்தின்கீழ் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 306 ஊராட்சிகளில் 3 ஆயிரத்து 84 குக்கிராமங்களில் 2 ஆயிரத்து 530 இடங்கள் அதிகமாக குப்பைகள் குவிக்கப்பட்டுள்ள 'ஹாட்ஸ்பாட்' இடங்களாக கண்டறியப்பட்டு உள்ளது. அந்த பகுதிகளில் 2 ஆயிரத்து 588 தூய்மை காவலர்கள், நேரு இளையோர் மைய தொண்டர்கள், மகளிர் குழுவினர், ஊராட்சி பிரதிநிதிகள் மூலம் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

இந்த ஆய்வின்போது, கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார், ஊராட்சிகள் உதவி இயக்குனர் ரங்கராஜன், ஆத்தூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் முருகேசன், ஆத்தூர் ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தட்சிணாமூர்த்தி, ஏழுமலையான், சீவல்சரகு ஊராட்சி தலைவர் ராணி ராஜேந்திரன், போடிகாமன்வாடி ஊராட்சி தலைவர் நாகலட்சுமி சசிக்குமார், தொப்பம்பட்டி ஊராட்சி தலைவர் கருப்பையா, சீவல்சரகு ஊராட்சி செயலாளர் சேசுராஜ், அம்பாத்துரை ஊராட்சி செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.



Next Story