நெல்லையப்பர் கோவில் தேர்களை சுத்தம் செய்யும் பணி


நெல்லையப்பர் கோவில் தேர்களை சுத்தம் செய்யும் பணி
x

நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தையொட்டி தேர்களை தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் பீய்ச்சியடித்து சுத்தம் செய்தனர்.

திருநெல்வேலி

நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தையொட்டி தேர்களை தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் பீய்ச்சியடித்து சுத்தம் செய்தனர்.

தேர் திருவிழா

நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டு தோறும் ஆனிப்பெருந்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த திருவிழாவின் போது நடைபெறும் தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

அத்தகைய சிறப்பு வாய்ந்த ஆனிப்பெருந்திருவிழா வருகிற 24-ந் தேதி (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி தேர்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது. அம்பாள் தேர் சாரம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. சுவாமி தேர் சீராக ஓடுவதற்கு தேவையான அடிப்படை வேலைகள் செய்யப்பட்டு உள்ளது.

சுத்தம் செய்தனர்

இந்த நிலையில் தேர்களை சுத்தம் செய்யும் பணி நேற்று காலை நடைபெற்றது. பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் தண்ணீர் டேங்கர் லாரியுடன் வந்தனர். அவர்கள் விநாயகர், முருகர், நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், சண்டிகேசுவரர் ஆகிய 5 தேர்கள் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து சுத்தம் செய்தனர். இதை தொடர்ந்து தேர் சக்கரங்களுக்கு வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்ந்து நடைபெற இருக்கிறது.திருவிழா, தேரோட்டத்துக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் செய்து வருகிறார்கள்.


Next Story