பொதுமக்கள் சாலை மறியலுக்கு முயற்சி


பொதுமக்கள் சாலை மறியலுக்கு முயற்சி
x

செங்கோட்டை அருகே பொதுமக்கள் சாலை மறியலுக்கு முயற்சி செய்தனர்.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டை அருகே புதூர் பேரூராட்சி பகுதியில் உள்ள லாலாகுடியிருப்பு, பூலாங்குடியிருப்பு, தவணை உள்ளிட்ட பகுதிகளில் சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளையும் மேற்கொள்ள புதூர் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் பயன் இல்லை என்று கூறி சுமார் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கட்டளைகுடியிருப்பில் திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலுக்கு முயன்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த செங்கோட்டை தாசில்தார் முருகு செல்வி, வருவாய் ஆய்வாளர் மாடசாமி, கிராமநிர்வாக அலுவலர் ஆயிஷாபேகம், செங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணன், புதூர் பேரூராட்சி நிர்வாக அலுவலர் குமார் பாண்டியன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரு வாரத்திற்குள் சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பேரில் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story